Home Uncategorized ஜிம்க்கு போகாமலே கட்டுக்கோப்பான உடல் வேண்டுமா? அப்போ இந்த அரிசி சாப்பிடுங்க!

ஜிம்க்கு போகாமலே கட்டுக்கோப்பான உடல் வேண்டுமா? அப்போ இந்த அரிசி சாப்பிடுங்க!

நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுகளில் கருப்பு கவுனி அரிசி மிக முக்கியமானது. ஏனெனில், இது மனிதனுக்கு அவசியமான அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ள அரிசி வகையாகும். இரத்தசோகை நோய் உள்ளவர்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு நீங்க இந்த அரிசி உதவுகிறது. நம் முன்னோர்களின் உணவு முறைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளில் கருப்பு கவுனி அரிசி முக்கிய பங்கு வகிக்கிறது. வாரம் இருமுறை இந்த அரிசியை உணவாக உட்கொண்டால், உடல் அனைத்து சத்துக்களையும் பெற்று முழு ஆரோக்கியம் கிடைக்கும். இந்த அரிசியை எவ்வாறு உணவாக பயன்படுத்துவது என்பதை பதிவில் பார்ப்போம்.

கருப்பு கவுனி அரிசியில் உயர்ந்த இரும்பு, கால்சியம், மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்துள்ளன, இதனால் எலும்புகளுக்கு சிறந்த ஊட்டச்சத்து கிடைக்கிறது மற்றும் எலும்புகளும் மூட்டுகளும் வலுப்பெறுகின்றன. மூட்டு தேய்மானம் மற்றும் பிற எலும்பு நோய்களுக்கு இது மிகச் சிறந்த மருந்தாக உள்ளது. இதில் உள்ள உயர்தர ஆண்டி ஆக்சிடென்ட்களும் பைட்டோ நியூட்ரியன்ட்டுகளும் பல நோய்களை தடுக்க உதவுகின்றன, குறிப்பாக கேன்சர் நோய்களை தடுக்கும். கோளோன் கேன்சர் போன்ற பெருங்குடல் கேன்சர்களை தடுக்க இது உதவுகிறது. அதிகமான நார்ச்சத்து உள்ளதால், செரிமான கோளாறுகள் நீங்கி, ஜீரண மண்டலம் வலுப்பெறும், மலச்சிக்கல் இல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கை அடைய முடியும்.

கருப்பு கவுனி அரிசி உணவு உட்கொள்ளும் நபர்களுக்கு, ரத்த குழாய்களில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து, உடலில் தேவையான நல்ல கொழுப்புகளின் அளவை சீராக பராமரிக்கும். இது ரத்த குழாய்களில் அடுப்புகளை நீக்கி, இரத்தம் சீராக உடலில் செல்ல உதவும், இதனால் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் போன்றவை குணமாகும். மார்பக இதய நோய்கள் வராமல் தடுக்கவும், உடலின் உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

karupu kavuni arisi

கருப்பு கவுனி அரிசியில் உள்ள ஆன்தோசைனின் எனும் பைட்டோகெமிக்கல், கொழுப்பு படிந்த கல்லீரலை குணப்படுத்தும் மற்றும் கல்லீரலின் செயல்திறனை அதிகரிக்கும். இது செரிமான சம்பந்தப்பட்ட கோளாறுகளை சரிசெய்யும்.

கருப்பு கவுனி அரிசியை வெள்ளை அரிசிக்கு பதிலாக உணவில் சேர்ப்பது, உடல் எடையை குறைக்க உதவும். இந்த அரிசி சிறிது உண்ணப்பட்டாலே வயிறு நிறைவாக உணர்வதால், அடிக்கடி பசிக்கும் உணர்வைக் குறைக்கிறது, இதனால் அதிக உணவு உட்கொள்ளும் தேவையை தவிர்க்க முடியும். உடல் எடையை குறைக்கும் முயற்சிகளில் இந்த அரிசியை சேர்ப்பது நல்ல பலனை தரும்.

கருப்பு கவுனி அரிசியில் உள்ள புரதச்சத்து, நார்ச்சத்து, சுண்ணாம்பு, கால்சியம், இரும்பு சத்து ஆகியவை வளரும் குழந்தைகளுக்கு அவசியமான ஊட்டச்சத்துக்களை வழங்கும். இந்த அரிசி வாரம்  குழந்தைகளுக்கு வாரத்தில் இரு முறை காலையில் இந்த அரிசியை கஞ்சியாகவோ, உணவாகவோ அல்லது சூப்பாகவோ குடிக்க வைத்தால், அவர்களுக்கு நல்ல உடல் ஊட்டமும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். இது குழந்தைகளில் உடல் பருமன் நோய்கள் வருவதை தடுக்கும், மேலும் அவர்கள் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பார்கள். இந்த அரிசியில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருட்கள் உடலில் வீக்கங்களை சரி செய்யும், மேலும் நோய் எதிர்ப்பு திறனை பல மடங்கு அதிகரிக்கும் மற்றும் பல விதமான நோய்களிலிருந்து நம்மை காக்கும்.

கருப்பு கவுனி அரிசியை உணவில் சேர்த்து வரும் குழந்தைகளுக்கு கண் பார்வை கூர்மை அடையும், மேலும் நல்ல பார்வை திறன் கிடைக்கும். பெரியவர்களுக்கு இது கண் புறநோய் வருவதை தடுக்கும். பலருக்கு தெரியாத இந்த கருப்பு கவுனி அரிசியை நாம் உணவில் சேர்த்து வந்தால், நம் முன்னோர்கள் போன்று வயதான காலத்திலும் நாம் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்போம், மேலும் நோயின்றி பல ஆண்டுகள் வாழ்வோம் என்பதில் சந்தேகமில்லை.
 

Exit mobile version