Home ஆன்மீகம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒரு மாதத்தில் 3 கோடி 95 லட்சம் காணிக்கை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஒரு மாதத்தில் 3 கோடி 95 லட்சம் காணிக்கை!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்களால் உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கைகள் எண்ணப்பட்டதில், கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 3 கோடியே 95 லட்சம் ரூபாய் வருவாயாகக் கிடைத்துள்ளது.

பணமாக மட்டுமின்றி, பக்தர்களின் நேர்த்திக்கடனாக 2 கிலோ 360 கிராம் தங்கமும், 21 கிலோ 420 கிராம் வெள்ளியும் காணிக்கையாகச் செலுத்தப்பட்டுள்ளன.

இவை தவிர, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 352 வெளிநாட்டு நாணய நோட்டுகளையும் பக்தர்கள் தங்களது காணிக்கையாக வழங்கியுள்ளனர்.

இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் காணிக்கை எண்ணும் பணியில், கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Exit mobile version