Friday, March 13, 2026
HomeUncategorizedராமாயணம்” பற்றி ஸ்ரீ கிருஷ்ணருக்குத் தெரியுமா? - M.பழனிவாசன்

ராமாயணம்” பற்றி ஸ்ரீ கிருஷ்ணருக்குத் தெரியுமா? – M.பழனிவாசன்

ஆம்! கிருஷ்ணர் ராமாயணத்தைப் பற்றி முழுமையாக அறிந்திருந்தார். மகாபாரதத்திலிருந்து அதை உறுதிப்படுத்தும் பல கூற்றுகளும், சாட்சிகளும் உண்டு. அவற்றில் ஒரு சிலவற்றை மட்டும் இங்கே காணலாம் :

1.      ”கிருஷ்ணர் ஏன் அக்ரிம் பூஜைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்?” என்று ராஜ் சுயக்யா சிசுபால் கேள்வி எழுப்பும்போது. ”ராமாவதாரம்” உட்பட கிருஷ்ணர் முன்பு எடுத்த அனைத்து அவதாரங்களையும் அங்கிருந்த அனைத்து மன்னர்களுக்கும் பீஷ்மர் விளக்கினார்.

2.     பகவத்கீதையின் 10வது அத்தியாயத்தில் கிருஷ்ணர்

குறிப்பிடப்பட்டுள்ள கருத்து:

“ஆயுதம் ஏந்தியவர்களில் நான் ஸ்ரீராமன்”.

3.     குருக்ஷேத்திரப் போரின் முடிவில், துரியோதனன் ஒரு

குளத்தில் தன்னை மறைத்துக்கொண்டபோது, கிருஷ்ணன் யுதிஷ்டிரனைக் குளத்திலிருந்து வெளியே கொண்டு வருவதற்குப் பதிலாக தந்திரங்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறான். இதற்கு கிருஷ்ணர் முந்தையப் போரில் எதிரிகளை தோற்கடிக்க பயன்படுத்தப்பட்ட தந்திரங்களை எடுத்துக் காட்டுகிறார். அதில் ஒரு உதாரணமாக, ”ஸ்ரீராமர் எப்படி ராவணனை தோற்கடித்தார்?” என்பதையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

4.    `யுதிஷ்டிரர் உறவினர்களின் மரணத்தால் துக்கத்தில் இருக்கும் போது, கிருஷ்ணர் மன்னன் சஞ்சயனுக்கும் நாரதமுனிக்கும் இடையே நடந்த உரையாடலின்போது ஒரு கதையைச் சொல்கிறார்.  அதில் நாரதமுனி அரசனிடம் ”ஸ்ரீ ராமரைப் பற்றியும் அவனது ராஜ்ஜியத்தைப் பற்றியும்” கூறுகிறார்.

புராணங்கள், இதிகாசங்கள் போன்ற அனைத்தும் கட்டுக் கதைகள், இடைசெருகல்கள், கற்பனைப் பாத்திரங்கள் என புறந்தள்ளப்பட்டு, அவதூறுகளை அள்ளித் தெளிப்பதை வழக்கமாக சிலர் கொண்டுள்ளனர். ஆனால், அவ்வாறு சொல்பவர்களைத்தான் அறிவார்ந்தவர்கள் புறக்கணிக்க வேண்டும். ஏனெனில்,

இராமாயணம் நிகழ்ந்ததோ “திரேதா யுகம்” மஹாபாரதம் நிகழ்ந்தது “துவாபர யுகம்”. ஆக, இரண்டிற்கும் இடையே பல்லாயிரம் ஆண்டுகள் இடைவெளி. ஆனாலும், யுகங்களைக் கடந்தும் இவை போன்ற செய்திகள் தலைமுறை தலைமுறையாக பதிப்பிக்கப்பட்டிருப்பது நம் அனைவருக்கும் பிரமிப்பு தருவதாகும். அவற்றில் கூறப்படும் நல்ல கருத்துகள், விஞ்ஞான ரீதியிலான செய்திகள் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து பதிப்பிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.

இதுவே பாரத மண்ணின் புண்ணியம் மிகுந்த பெருமை.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments