Thursday, March 12, 2026
HomeUncategorizedமு.க.ஸ்டாலின் என் அண்ணன்! - ராகுல் காந்தி!

மு.க.ஸ்டாலின் என் அண்ணன்! – ராகுல் காந்தி!

நான் தமிழ்நாட்டு மக்களை மிகவும் நேசிக்கிறேன்; தமிழ்நாட்டு மக்களின் கலாச்சாரம், வரலாறு, மொழி ஆகியவை என்னை மிகவும் ஈர்த்துள்ளது!

தமிழ்நாட்டு மக்களிடம் நான் கொண்டிருக்கிற உறவு அரசியல் உறவல்ல. அதுவொரு குடும்ப உறவு; அவர்களை நான் ஆத்மார்த்தமாக நேசிக்கின்ற உறவு!

சமூக நீதியின் பாதையில் எப்படி நடப்பது என்பதை இந்த நாட்டுக்கே தமிழ்நாட்டு மக்கள்தான் தெரியப்படுத்தியுள்ளீர்கள். அதனால்தான், தமிழ்நாட்டில் இருந்து இந்திய ஒற்றுமைக்கான யாத்திரையை தொடங்கினேன்!

எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்துகொள்ள விரும்புகிறேனோ, அப்போதெல்லாம் நான் தமிழ்நாட்டை பார்க்கிறேன்; அதனுடைய கலாச்சாரம், தொன்மையான பண்பாடு, தமிழர்களின் சரித்திரத்தை படித்த காரணத்தால் இந்தியாவை பிரதிபலிக்கின்ற அற்புத கண்ணாடியாக நான் தமிழ்நாட்டை பார்க்கிறேன்!

“காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது, இரண்டு மாநில முதலமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். எதிர்க்கட்சித் தலைவர்கள் மிரட்டப்படுகிறார்கள்;

நாட்டில் உள்ள ஒருசில பணக்காரர்கள் மட்டுமே பயனடையும் வகையில் செயல்படும் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை புறக்கணித்துவிட்டது.”

 

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments