Sunday, April 19, 2026
HomeUncategorizedசென்னையில் விமான சேவை ரத்து

சென்னையில் விமான சேவை ரத்து

கனமழை, போதிய பயணிகள் வருகை இல்லாததால் சென்னையில் விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. பெங்களூரு, அந்தமான், புது டெல்லி, மஸ்கட் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. ஏராளமான பயணிகள் தங்களின் பயணத்தையும் ரத்து செய்துள்ளனர். இதனால் விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருக்கிறது.

விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட உள்ளதால் அதற்கு ஏற்ப பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிடலாம் என்று விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments