Sunday, April 19, 2026
HomeUncategorizedஊட்டி ரயில்-லுக்கு ஹேப்பி பர்த் டே 

ஊட்டி ரயில்-லுக்கு ஹேப்பி பர்த் டே 

யுனெஸ்கோவோட புராதன அந்தஸ்து பெற்றது என்பது உள்பட, ஏகப்பட்ட புகழ் கிரீடங்கள் இந்த ஊட்டி மலை ரயிலுக்கு இருக்குது. 

இந்த ரயிலில் பயணம் செய்தால் இயற்கை சூழ்நிலையை அனுபவிச்சிக்கிட்டே 208 வளைவுகள் வழியாக வளைஞ்சு, நெளிஞ்சபடி, 16 குகைகளுக்குள் புகுந்து வெளியேறியபடி, 250 பாலங்களை கடந்து சுமாரா 5 மணி நேரம் அருமையான பயணம் செய்தால் ஊட்டி வரும். இந்த இனிமையான அனுபவத்தை பெற, ஜில்லிடும் குளிரை அனுபவிப்பத்ற்கென்றே உலகம் முழுவதும் இருந்து வருகின்றனர்.?

ஆரம்பத்தில் ஊட்டிக்கு பயணம் செய்தால் இந்த மலை ரயிலில் பயணம் செய்யலாம் என்பது போய், இந்த மலை ரயிலில் பயணம் செய்வதற்காகவே ஊட்டிக்கு பயணம் செய்பவர்களும் இருக்கிறார்கள். இத்தனிக்கும் இந்த ரயிலில் புறப்படுவது மட்டுமே நிச்சயமான விஷயம்; போய்ச் சேர்வது என்பது நிச்சயமில்லாத விஷயம். எந்த இடத்திலும் எப்போது வேண்டுமானாலும் நின்றுவிடும் என்பதாகவே செய்திகள் இன்றுவரை வந்துகொண்டு இருக்கின்றன. இருந்தாலும் இந்த ரயில் பயண அனுபவத்தை தவறவிட விருப்பமில்லாமல் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் பயணிக்க பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க்கதான் செய்றாங்க

இத்தகைய பாரம்பரியமிக்க ஊட்டி மலை ரயிலுக்கு இன்று  பிறந்த நாள்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments