சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்த படத்தில், சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார், சாய் பல்லவி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் வருகிற 31-ந் தேதி வெளியாக உள்ளது.
கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் டிரெய்லரை பான் இந்தியா நடிகர்கள், தமிழில் கமல் ஹாசன் உள்ளிட்டோர் வெளியிட்டுள்ளனர்.

