Tuesday, March 17, 2026
HomeUncategorizedகடலூர் - சென்னை இடையே வரும் 30ம் தேதி கரையை கடக்கும் ஃபெங்கல் புயல்

கடலூர் – சென்னை இடையே வரும் 30ம் தேதி கரையை கடக்கும் ஃபெங்கல் புயல்

புயல் கரையை கடக்கும் போது சென்னையில் 29, 30தேதிகளில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு.

புயல் கரையை கடந்தபின் உள்மாவட்டங்களான ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரியில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் உருவாகும் ஃபெங்கல் புயல் – துறைமுகங்களில் 3 எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

ஒன்பது துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.

காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.

புயல் அருகில் உருவாவதை குறிப்பது 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.

மீனவர்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்த அறிவுரை.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments