Tuesday, March 10, 2026
HomeUncategorizedதிருவையாறு மகா கும்பாபிஷேகம் ஐந்தாம் கால யாகசாலை பூஜை

திருவையாறு மகா கும்பாபிஷேகம் ஐந்தாம் கால யாகசாலை பூஜை

திருக்கயிலாய பரம்பரை  தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு பூலோக கயிலாயம் ஸ்ரீபஞ்சநதீஸ்வர சுவாமி தேவஸ்தானம் –  ஸ்ரீ அறம்வளர்த்தநாயகி உடனாகிய ஸ்ரீஐயாறப்பர் திருக்கோயில்  மகா கும்பாபிஷேகப் பெருவிழா

தருமையாதீன அவர்கள் திருமுன்னர் இன்று மாலை ஐந்தாம் கால யாகசாலை பூஜைகள், பூர்ணாஹுதி,மகா தீபாராதனை , ஷோடச உபச்சாரம்,வேதம் திருமுறை பாராயணம், வெகு விமரிசையாக நடைபெற்றது!!!

இவ்விழாவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் திரு பாபாஜி ராஜே போன்ஸ்லே, தருமையாதீன திருக்கூட்டத்து தம்பிரான் சுவாமிகள், சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள், ஆதீன அடியவர்கள், ஆதீன அன்பர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள், தருமையாதீன வேத சிவாகம பாடசாலை, திருமுறை பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தார்கள்!!!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments