தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகக் கூறி, ‘டிக் – டாக், ஷேர் – இட்’ உட்பட, 100க்கும் மேற்பட்ட செயலிகளை கடந்த 2020ல் மத்திய அரசு தடை செய்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகளின் பகிர்வுக்கும், அரட்டை பேச்சுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.அடுத்தடுத்த ஆண்டுகளிலும், சீன செயலிகளுக்கு எதிரான தடை தொடர்ந்தது.
இந்நிலையில், 119 செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த செயலிகளின் பட்டியலை அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலை நடத்தும் கண்காணிப்பு தளமான லுாமென் தரவு தளம் வெளியிட்டுள்ளது. இந்த தடை உத்தரவை கூகுள் நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.

