Monday, June 29, 2026
Homeசெய்திகள்CBSE மாணவர்களுக்கு நிம்மதி… 3-வது மொழி தேர்வில் புதிய சலுகைகள் அறிவிப்பு!

CBSE மாணவர்களுக்கு நிம்மதி… 3-வது மொழி தேர்வில் புதிய சலுகைகள் அறிவிப்பு!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்” (Central Board of Secondary Education – CBSE) தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) விதிகளுக்கு ஏற்பப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை (Three Language Policy) நடைமுறைப்படுத்துவதில் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு முக்கியத் தளர்வுகளை அறிவித்துள்ளது.

இதன்படி, 2026-27 கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் மூன்றாவது மொழிக்கு (R3) பள்ளி அளவிலான உள்மதிப்பீட்டுத் தேர்வு (Internal school-based assessment) மட்டுமே நடத்தப்படும் என்றும், இந்த பேட்ச் மாணவர்கள் 2027-28 இல் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும்போது இந்த மூன்றாவது மொழிக்கு எந்தவொரு சிபிஎஸ்இ வாரிய பொதுத்தேர்வும் (CBSE Board Examination) இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 2026-27 கல்வியாண்டில் 7 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் படித்து, ஏற்கனவே 2 தாய்மொழி அல்லாத மொழிகளைத் (Non-native languages) தேர்ந்தெடுத்துப் படித்து வரும் மாணவர்களுக்கும் சிறப்புத் தளர்வு வழங்கப்பட்டுள்ளது; இவர்கள் கூடுதலாக ஒரே ஒரு பாரதிய மொழியைக் (Bhartiya Bhasha) கற்றுக்கொண்டு, அதனை 10-ஆம் வகுப்பு வரை தொடரலாம்.

இந்த மாணவர்களுக்கும் 10-ஆம் வகுப்பில் மூன்றாவது மொழிக்கு வாரியப் பொதுத்தேர்வு கிடையாது, பள்ளி அளவிலான உள்மதிப்பீடு மட்டுமே போதுமானது. ஆனால், 2026-27 கல்வியாண்டில் 6-ஆம் வகுப்பில் இணையும் புதிய பேட்ச் மாணவர்கள் படிக்கும் மூன்று மொழிகளில் இரண்டு கட்டாயமாகப் பாரதிய மொழிகளாக இருக்க வேண்டும் என்பதோடு, இவர்கள் எதிர்காலத்தில் 10-ஆம் வகுப்பு செல்லும்போது மூன்றாவது மொழிக்கு வாரியப் பொதுத்தேர்வை எதிர்கொள்ள வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளி குழந்தைகள் (CwSN), இந்தியாவின் வெளிநாட்டுக் கிளைகளில் படிக்கும் சிபிஎஸ்இ மாணவர்கள் மற்றும் இந்தியா திரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு இந்த மும்மொழிக் கொள்கையின் மூன்றாவது மொழியைக் கற்பதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் வேறு மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்ய நேரிட்டால், 9-ஆம் வகுப்பிலும் மாணவர்கள் தங்களின் முந்தைய மொழி அமைப்பையே தொடர அனுமதிக்கப்படும் வேளையில், இதற்கேற்ப பள்ளிகள் தங்களின் தற்போதைய ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பிஜி பட்டதாரிகள் அல்லது ஆன்லைன் மற்றும் கலப்பு முறை (Hybrid teaching) கற்பித்தல் மூலம் தகுந்த மனித வளங்களை நெகிழ்வுத்தன்மையுடன் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் சிபிஎஸ்இ வாரியம் தனது அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில் விரிவாகத் தெரிவித்துள்ளது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments