தூத்துக்குடியில் தனியார் ஹோட்டலில் நடந்த பட்ஜெட் விளக்க கூட்டத்தில் கலந்து கொண்டார் பா.ஜ. க. எம்.எல். ஏ .நயினார் நாகேந்திரன்.
கூட்டம் முடிந்து உணவு அருந்த சென்ற போது அவரது கையில் செல்போன் இல்லை.
என்னோட செல்ல எங்கப்பா? பதறியபடி நயினார் கேட்க அந்த இடத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
ஆளாளுக்கு அவரது நம்பருக்கு டயல் செய்ய போன் சைலன்ட் மோடில் போடப்பட்டிருந்ததால் நோ யூஸ்..
கூட்டம் நடந்த இடத்தில் தேட சிலர் ஓடினர்.
சிசிடிவி புட்டேஜ பாருங்கப்பா என்று சிலர் ஐடியா கொடுத்தனர்
பத்து நிமிட களேபரத்திற்கு பின்னர் தொண்டர் ஒருவர் வேறு ஒருத்தரின்
செல்போன் என்று நினைத்து(?) தன் கையில் வைத்திருந்த ஃபோனை இதுதானா பாருங்க என்று நீட்ட … இதான் என்றபடி வாங்கிக் கொண்டு பெருமூச்சு விட்டார் நயினார் நாகேந்திரன்.

