Thursday, March 5, 2026
HomeUncategorizedபாடகி கல்பனா கவலைக்கிடம்

பாடகி கல்பனா கவலைக்கிடம்

பிரபல  பாடகி கல்பனா தெலங்கானா மாநிலம் ஐதாராபாத் நிஜாம்பேட்டையில் வசிக்கிறார்.  இவரோட வீட்டின் கதவுகள் ரெண்டு நாட்களா  திறக்காததால் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு  தகவல் அளிச்சாய்ங்க. இதனையடுத்து  போலீசார் அங்கு வந்து கதவுகளை உடைத்து பார்த்தபோது  ​​கல்பனா சுயநினைவு இல்லாமல் இருந்தார். உடனடியாக கல்பனாவை குக்கட்ப்பள்ளியில் உள்ள  தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  அவருடைய நிலைமை கவலைக்கிடமாக  இருப்பதாகத் டாக்டர்கள் தெரிவிச்சிருக்காய்ங்க. எதற்காக கல்பனா தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு  வாராய்ங்க

பின் குறிப்பு:

என் ராசாவின் மனசிலே படத்தில் வரும், போடா போடா புண்ணாக்கு… போடாத தப்புக் கணக்கு பாடல் மிக பிரபலம். அதேபோல, ‘புன்னகை மன்னன்’ படத்தில் கமல், சாப்ளின் செல்லப்பாவாக வரும் வாக்கிங் ஸ்டிக் காட்சியும்…!அந்த பாட்டை பாடியதும், இந்த காட்சியில் நடித்ததும் பிரபல பாடகி கல்பனா ராகவேந்தர்

தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பின்னணிப் பாடகி, மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சைகை மொழி ஆசிரியை எனப் பன்முகத் திறமை கொண்டவர்.

இவரின் ஹிட் பாடல்கள்  என்றால்  ‘கடவுள் தந்த அழகிய வாழ்வு’, ‘காத்தாடிபோல ஏண்டி என்னைச் சுத்துறே’, ‘பெண்ணே நீயும் பெண்ணா’, ‘ஒரு சின்ன வெண்ணிலா போலே’, ‘மதுரை ஜில்லா மச்சம்தாண்டா’, ‘ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப் போட்டு’, ‘டார்லிங் டம்பக்கு’, ‘ஓயா ஓயா’ என நிறைய சொல்லலாம். தமிழ், தெலுங்கு என இதுவரைக்கும் ஆயிரத்து ஐநூறுப் பாடல்களைப் பாடியிருக்கார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments