Thursday, March 5, 2026
HomeUncategorizedலீனா திவாரி வாங்கியுள்ள வீட்டின் மதிப்பு தெரியுமா? தலையே சுத்துதே!

லீனா திவாரி வாங்கியுள்ள வீட்டின் மதிப்பு தெரியுமா? தலையே சுத்துதே!

இந்தியாவின் மிக அதிக விலை கொண்ட வீட்டை வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் யுஎஸ்வி லிமிடெட்டின் தலைவரான லீனா காந்தி திவாரி. மும்பையின் வொர்லியில் நமன் சனா பகுதியில் அரபிக்கடலை பார்த்தபடி  ரூ.639 கோடிக்கு கடல் நோக்கிய 2 அடக்குமாடி குடியிருப்புகளை அவர் வாங்கியுள்ளார்.

திவாரி, சரக்கு மற்றும் சேவை வரி, பதிவு கட்டணம் மற்றும் முத்திரை வரி என மொத்தம் ரூ.63.9 கோடி வரை செலுத்தியதாக கூறப்படுகிறது. மொத்தம் ரூ.703 கோடி செலுத்தப்பட்டுள்ளது. அரபிக் கடலை நோக்கிய இந்த சொத்துக்கள் 22,572 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளன, மேலும் ஒரு சதுர அடிக்கு ரூ.2.83 லட்சம் செலவாகும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில், இதே வொர்யில் கோடக் மஹிந்திரா வங்கியின் நிறுவனர் உதய் கோடக் மற்றும் அவரது குடும்பத்தினர் 22 அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்ட ஒரு முழு சொகுசு குடியிருப்பு கட்டடத்தை வாங்கினர். அதன் விலை ரூ.400 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. 
 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments