Tuesday, March 3, 2026
HomeUncategorizedவிமான கட்டணம் உயர்வு!

விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பையொட்டி தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை விமானங்களில் கட்டணம் உயர்வு.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் பள்ளித் தேர்வுகள் முடிந்து பலரும் தங்களது சொந்த ஊருக்கு விடுமுறைக்காக சென்றிருந்தனர். பள்ளி திறப்பதை முன்னிட்டு பலரும் கடந்த ஒரு வாரமாக சென்னைக்கு திரும்பி வருவதற்காக பஸ் மற்றும் விமான டிக்கெட்டுகளை புக் செய்துள்ளனர். சாதாரணமாக இருக்கும் கட்டணங்களை விட பல மடங்கு விமான கட்டணம் உயர்ந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

  • மதுரை – சென்னை வழக்கமான கட்டணம் ரூ.4,542. இன்றைய கட்டணம் ரூ.18,127
  • தூத்துக்குடி – சென்னை வழக்கமான கட்டணம் ரூ.4,214. இன்றைய கட்டணம் ரூ.17,401
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments