Thursday, February 5, 2026
HomeUncategorizedகூட்டணி ஆட்சிக்கு சாத்தியம் உள்ளது- பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

கூட்டணி ஆட்சிக்கு சாத்தியம் உள்ளது- பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

2026 தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு சாத்தியம் உள்ளது: அதிமுக ராஜ்யசபா சீட்டு வழங்காதது குறித்த கேள்விக்கு பொறுத்தால் பூமி ஆள்வார் என கரூரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி.

கரூரில் தனியார் விடுதியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பு:

தனியாக நிற்பதை உருவாக்கியது கேப்டன் தான், இதுவரை எந்த கட்சியும் தனித்து நிற்கவில்லை தற்போது சீமான் தனித்து நிற்கிறார் விஜய் அவருடைய நிலைப்பாட்டை கூறவில்லை,  இனி தேமுதிக தனித்து நிற்பது காலம் தான் முடிவு செய்யும், 2026 தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்று மிகப் பெரிய பலத்தோடு சட்டசபைக்கு செல்லும் எங்களுடைய எண்ணம்

தேமுதிக வாக்கு சதவீதம் குறைந்து வருகிறதா என்ற கேள்விக்கு 234 தொகுதிகளிலும் போட்டியிட்டதை தற்போது நடைபெற்ற தேர்தலோடு ஒப்பிடக்கூடாது.

40 தொகுதிகளிலும் நின்றதற்கும், 4 தொகுதியில் நின்றதையும் ஒப்பிடக்கூடாது.

ஆண்ட கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் நாங்கள் நிகராக தான் உள்ளோம் எங்கள் வாக்கும் நிகராக தான் உள்ளது.

234 தொகுதிகளுக்கும் மண்டல, மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் உடன் இணைந்து நான்கு நாட்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

விஜய் கட்சியில் கூட்டணி இருக்கிறதா என்ற கேள்விக்கு அதற்கு அவர்தான் சொல்ல வேண்டும் நாங்கள் கட்சி தொடங்கி 20 வருடம் ஆனது. 

அரசியல் ஆதாயம் என்பது தேர்தல் நோக்கி தான் நகர்கிறது. 

எங்களுடைய நகர்வும் இனிய அரசியலை நோக்கி தேர்தல் கண்ணோட்டத்தில் இருக்கும்,

அதிமுக ராஜ்யசபா சீட்டு வழங்காது குறித்த கேள்விக்கு: 2026 இல் உறுதியாக தரப்படும் என்று  கூறியுள்ளார் அதனைப் பொறுத்திருந்து பார்ப்போம் பொறுத்தார்  பூமி ஆழ்வார்.

கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நல்லது ஏனென்றால் அது தப்பு நடந்தால் சுட்டிக்காட்ட முடியும். 

கூட்டணி ஆட்சி 2026 இல் சாத்தியம்,

கரூர் மாவட்டத்தில் அதிக மணல் கொள்ளை, 24 மணி நேரமும் மது விற்பனை, லாட்டரி சீட்டு விற்பனை அதிகளவு நடைபெற்று வருகிறது. 

தற்போது உள்ள ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீரழிந்து உள்ளது என்று கூறினர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments