Tuesday, September 22, 2026
HomeUncategorizedசென்னைக்கு பக்கத்துல இப்படி ஒரு இடமா? கண்டிப்பா போகவேண்டிய நீர்வீழ்ச்சி!

சென்னைக்கு பக்கத்துல இப்படி ஒரு இடமா? கண்டிப்பா போகவேண்டிய நீர்வீழ்ச்சி!

சென்னைக்கு அருகிலுள்ள நீர்வீழ்ச்சியை பற்றி உங்களுக்கு தெரியுமா?. சென்னையிலிருந்து 90 கிலோமீட்டர் தூரத்தில் ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நாகலாபுரம் வனப்பகுதியில் அமைந்திருக்கும் ஆரே நீர்வீழ்ச்சி தான் அது. 

எப்படி செல்வது

சென்னையிலிருந்து ஊத்துக்கோட்டை, பிச்சாட்டூர் வழியாக நாகலாபுரம் செல்வதற்கு வழிகாட்டுதல் இதோ. ஒரு நபருக்கு கட்டணமாக 50 ரூபாய் மற்றும் வாகன நிறுத்தத்திற்கு 50 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த அருவி ஆந்திர வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆண்டு முழுவதும் இங்கு நீர் வரத்து நன்றாக இருக்கும், மற்றும் பல விதமான நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீர் ஓடைகள் இயற்கையின் அழகில் காணலாம். தெளிவான நீர் உடைகள் கண்ணாடி போல் இருக்கும்.

அருவிகள்

இங்கு நான்கு பெரிய நீர்வீழ்ச்சிகள் உள்ளன, அவற்றில் இரண்டு அருவிகளுக்கு மட்டுமே மக்கள் சென்று ரசிக்க முடியும். வாகனம் நிறுத்தும் இடத்திலிருந்து சுமார் 20 நிமிடம் நடந்து சென்றால் ஒரு குகை சிவன் கோயில் உள்ளது. அழகிய படிகளுடன் அமைந்துள்ள கோயில் மிகவும் ரம்யமானது. வணக்கங்கை எனப்படும் சிறிய ஓடை பாறைகளுக்கிடையே அழகாக ஓடுகிறது. நம் பயணம் ஆரம்பித்து 45 நிமிடம் தூரத்தில் ஆரே நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

ஆரே நீர்வீழ்ச்சி 

ஆரே நீர்வீழ்ச்சி ஒரு மிகப்பெரிய குளம் போல் பாறைகளில் ஒட்டி சாய்வருவி நீர்வீழ்ச்சியாக ஊற்றிக் கொண்டிருக்கும். இயற்கையின் அழகில் கண்களுக்கு குளிர்ச்சி ஊட்டும் இந்த அருவி மிக அழகாக அமைந்துள்ளது. 

இரண்டாவது அருவி

இரண்டாவது அருவிக்கு செல்வதற்கு மிகவும் கடுமையான பாறைகளை பிடித்து மேலே ஏறி செல்ல வேண்டும், மேலும் வார இறுதி நாட்களில் மட்டுமே இந்த அருவியை சென்று காண முடியும்.

  மூன்றாவதும் நான்காவது அருவிகள் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இயற்கை சூழ்ந்த வனப்பகுதியில் ட்ரெக்கிங் செல்வோருக்கு மிகப்பெரிய அனுபவமாக அமையும். செல்லும் பாதை முழுவதும் மண் சாலைகளும், பாறைகளால் நிறைந்த பாதையும், பாறைகளை பிடித்து ஏறும் வழியுமாக இருக்கும்.

இந்த கோடைக் காலத்தில், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஒருநாள் ட்ரிப்பாக சென்று, நாகலாபுரத்தில் உள்ள அறிவியை கண்டு ரசித்து, இயற்கையின் அழகையும் மாசில்லாத காற்றையும் சுவாசித்து, உடலுக்கு புத்துணர்ச்சியை பெறலாம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments