Sunday, March 22, 2026
HomeUncategorizedஎன்னடா இது அக்ஷய் குமாருக்கு வந்த சோதனை! இப்படி மாறிட்டாரே!

என்னடா இது அக்ஷய் குமாருக்கு வந்த சோதனை! இப்படி மாறிட்டாரே!

பாலிவுட்டின்  முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அக்ஷய் குமார். தமிழிலும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஹவுஸ்புல் 5 திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. இருந்தாலும் இப்படம் சுமாரான விமர்சனங்களையே பெற்றது. இந்நிலையில் நடிகர் அக்ஷய் குமார் செய்த செயல் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி கொண்டிருக்கின்றது.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மூன்று படங்களும் படுதோல்வியை அடைந்தது..  இதனால் அடுத்த படத்தில் வெற்றி கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் அக்ஷய் குமார், தமிழில் வெளியாகி தேசிய விருதை பெற்ற சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்திருந்தார். ஆனால் அந்த படமும் தோல்வி அடைந்தது.

 தற்போது ஹவுஸ்புல் 5 என்ற திரைப்படத்தில் நடித்திருக்கும் அக்ஷய் குமார். இந்த படத்திற்கு பாசிட்டிவ் ரிவ்யூ கிடைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். இந்த படத்தில் இவருடன் இணைந்து அபிஷேக் பச்சன், ரித்தேஷ், ஜாக்லின் பெர்னாண்டஸ், சஞ்சய் தத், ஜாக்கி ஷரப்  என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வெளியான  தியேட்டர்களின் வாசலில் அக்ஷய் குமார் செய்த செயல் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. இந்தத் திரைப்படம் வெளியிடப்பட்ட திரையரங்கின் வாசலில் முகம் முழுக்க மறைத்து  மாஸ்க்  அணிந்தபடி  படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களிடம் படம் எப்படி இருக்கிறது? அக்ஷய் குமார் எப்படி நடத்தியிருக்கிறார் என்ற கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கிறார். ரசிகர்களும் கேள்வி கேட்பது அக்ஷய் குமார் தான் என்று தெரியாமல் தங்களது விமர்சனங்களை கூறிவிட்டு செல்கின்றனர். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments