Wednesday, March 4, 2026
HomeUncategorizedஉங்க குடும்பத்துல அடிக்கடி சண்டை வருதா? இந்த மந்திரத்தை சொல்லுங்க!

உங்க குடும்பத்துல அடிக்கடி சண்டை வருதா? இந்த மந்திரத்தை சொல்லுங்க!

குடும்பம் என்பது பாசம், வாக்குவாதம், சண்டை, அரவணைப்பு என அனைத்தும் கலந்ததாக இருக்கும். அதுவே சில பேர் வாழ்க்கையில் அடிக்கடி சண்டை வருவதும், ஒருவருக்கு ஒருவர் பார்த்தாலே எதிரிகள் போல வாக்குவாதத்தில் ஈடுபடுவதுமாகவே இருப்பார்கள். பொதுவாகவே சண்டை அடிக்கடி வரும் வீட்டில் மகாலட்சுமி தங்க மாட்டாள்

 என்று பலரும் கூறுவது உண்டு. குடும்பத்தில் அடிக்கடி சண்டை வருவதற்கு சில கிரக நிலைகளும் காரணம் என்கின்றனர்.  குடும்பத்திற்குள் சண்டை வரக்கூடாது என்று பலரும் பல விதமான பரிகாரங்களை செய்வதும் உண்டு.. ஒரு சில பரிகாரங்களை நம் கடைப்பிடித்தாலே நம் குடும்ப வாழ்க்கை சண்டை சச்சரவுகள் இல்லாத சந்தோஷமான வாழ்க்கையாக அமையும். அவை என்ன என்பதை நாம் பார்ப்போம்.

சனி பகவானுடன் தொடர்புடைய கருத்து வேறுபாடுகள் உங்கள் குடும்பத்தில் நிறைவே வந்தால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது சனி பகவானை சமாதானம் செய்வதை ஆகும். அதனால் தினமும் சனி எந்திரத்தை ஜபிக்கலாம்.ஏழு முகி ருத்ராட்சத்தையும் அணியலாம்

இதுவே வீட்டில் ஏற்படும் சண்டை ராகுடன் தொடர்புடையதாக இருக்கிறது என்றால் ராகு எந்திரத்தில் உள்ள ராகுவின் மந்திரத்தை உச்சரித்து வந்தால் நம்மை சுற்றி இருக்கும் தீய விளைவுகள் நீங்கும் என்றும் சொல்கின்றனர்.8 முகி ருத்ராட்சத்தை அணியவும்.

மேலும் அது கேது கிரக தோஷங்களுக்கு கணவன் மனைவி இடையே தொடர்ந்து சண்டை வந்து கொண்டே இருக்கும், இதற்கு கேதுக்குரிய மந்திரத்தை உச்சரிக்கவும், கேது யந்திரத்தை வணங்கவும், கணேஷ் மந்திரத்தை சொல்லி வர பிரச்சனைகள் தீரும்..9 முகி ருத்ராட்சத்தையும் அணியலாம்.

மாமியார் மற்றும் மருமகள் இடையே கருத்து வேறுபாடுகளை நீக்க பரிகாரம் உள்ளது.. குடும்பத்தில் மாமியார் மற்றும் மருமகள் இடையே எப்போதும் சண்டை இருந்தால், அதன் காரணமாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. 21 நாட்கள் கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லி வர பிரச்சனைகள் நீங்கும். 
மந்திரம்: ஓம் சாந்தி

கணவன்-மனைவி இடையே இணக்கம் ஏற்பட, சிவனையும் அன்னை பார்வதியையும் நம்பிக்கையுடன் வழிபட்டு வர வேண்டும்.. அதிலும் பின்வரும் மந்திரத்தை திங்கட்கிழமைகளில் சொல்லிவர நல்ல பலன் கிடைக்கும்..
மந்திரம்: ஓம் க்லீம் த்ரியம்பகா

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments