Wednesday, February 4, 2026
HomeUncategorizedஸ்டார்ட்! ஆக்ஷன்... அத்தியாயம் - 6

ஸ்டார்ட்! ஆக்ஷன்… அத்தியாயம் – 6

ஸ்டார்ட்! ஆக் ஷன்…
அத்தியாயம் – 6.

எஸ்..எஸ்..வாசன்..

சந்திரலேகா படத்தை இயக்கும்.. பெறுப்பை திரு.T.  ஒப்படைத்திருந்தார்…!

அவர்.. படத்தை இயக்காமல் விலகிக் கொண்டார்.!

திரு.எஸ்.. எஸ்.. வாசன் அவர்கள் சற்றும்.. மனம் தளரவில்லை….!

சந்திரலேகா திரைப் படத்தை அவரே இயக்க முடிவு செய்தார்!

கடினமான முடிவு…!

திறம் பட  அந்த முடிவை செயல் படுத்தினார்..!

காவியமாக வந்திருக்கும் கதை- திரைக்கதை – வசனத்தை.. சிறு துளி… கூட.. சேதப் படுத்தாமல்.. இயக்க.. போராடினார்..!

எழுத்தில்.. உள்ளதை.. திரையில் திறம்பட.. வடிப்பது.. சுலபமான செயலா?

Paper to Celluloid.. ஒரு பெரும்.. சவால் பயணமாயிற்றே!

அசரவில்லை.. அவர்…!

பிரமாண்ட அரங்க அமைப்புகளையும்..
காட்சிகளையும்.. உருவாக்கி …புதிது புதிதாக  வரும் தொழில் நுட்ப யுக்திகளையும்.. உட்புகுத்தி .. படமெடுப்பது.. அவரது.. தனித்துவ.. பாணியாயிற்றே!…

கொஞ்சம். கூட எந்த வகையான காம்ப்ரமைஸும் செய்யாமல்.. பணத்தை கடலாக செலவழித்து.. படத்தை.. தயாரித்து.. இயக்கினார்..!

அன்றைக்கே 3 மில்லியன்.. செலவில்.. படம்.. உருவானது..!

வீட்டிலிருந்த கடைசி பொட்டு.. தங்க நகையை கூட விற்க வேண்டிய நிலை..! அவர் தளரவில்லை..!

 படத்தை தயாரித்து முடிக்க…5.. வருடங்கள்!.. அவர் ஓயவில்லை!

படத்தின் இறுதிக் கட்டத்தில்.. வரும்.. நூற்றுக் கணக்கான Drums கள் மீது.. நாயகியும்  ஏராளமான … மங்கையரும்.. நடனமிடும்.. பாடல் காட்சியின்  ஒத்திகையே.. ஆறு மாதங்கள் நடந்தது..!

சர்க்கஸ் காட்சிகள்…!யானைகள் பங்கேற்ற காட்சிகள்.. ! திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக நீண்ட நேரம் இடம் பெற்ற  வாள்ச் சண்டைக் காட்சி..!

என படம்.. ஜனரஞ்சமாக உருவானது!

ஆப்ரிக்கா, எகிப்து மற்றும் பெர்சியா நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட Drums களை வைத்து.. இசையமைக்கப் பட்டது..
சந்திரலேகா 1948 ல் வெளியானது..!

வழக்கமாக 10 நகரங்களில்தான் படத்தை  வெளியிடுவார்கள்..! ஆனால்.. சந்திரலேகா படத்தை.. 120 திரை அரங்குகளில்  வெளியிட்டார்..!

நிறைய தியேட்டர்களில்  திரைப் படங்களை வெளியிடும் முறைக்கு அன்றே கட்டியம் கூறி விட்டார்!

நான்கு மாதங்களில் ஹிந்தியிலும்.. வெளியிட்டார்…!

Pan India படங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டார்..!

ஜப்பானிய மொழியிலும்.. Danish மொழியிலும்.. ஆங்கிலத்திலும் படம்.. வெளியானது..!

திரு.எஸ்.. எஸ்.. வாசன் அவர்கள் இந்தியாவின் …Cecil. B. Demile என்ற பெருமையைப்  பெற்றார்..!

படத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு.. ஐந்து வருடங்கள் கழித்து.. ஊதியத்திற்கு மேல்..போனஸ் வழங்கிய முதல்.. திரைக் கலைஞர்… திரு. எஸ்..எஸ்.. வாசன் அவர்கள்..!

Film federation of India, Producer council of India,. மற்றும்.. South Indian film chamber of commerce..களை நிறுவினார்..!
அவரது.. கலைச் சேவையைப் பாராட்டி..

மத்திய அரசு.. 1969 ல்.. பத்ம பூஷன்.. விருது வழங்கி கெளரவித்தது..!

1964 முதல் 1969 ல் இறக்கும் வரை.. ராஜ்ய சபா M.P. யாக பதவி வகித்தார்…!

திரைப் படத்  துறைக்கு.. தொழில் துறை அங்கீகாரம் கிடைக்க.. பாராளுமன்றத்தில்.. தீவிரமாக.. குரல் கொடுத்தார்!

தனது 65 வது வயதில்.. 1969ல்… இறை அடி சேர்ந்தார்!

அந்த திரை மேதைக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக.. 2004 ல் அவரது.. நூற்றாண்டு.. நினைவு நாளில் அஞ்சல் தலை வெளியிட்டு மத்திய அரசு.. கெளரம் பெற்றது!.

ஃபிலிம் மேக்கர் திரு. எஸ்….எஸ்..வாசன் அவர்களின் இரட்டைக் குழல்.. சப்தம்.. கலை உலகில் என்றென்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்!..

(தொடரும்)

– இயக்குநர் நித்தியானந்தம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments