ஜூலை 1 முதல் இன்று வரை தொடர்ந்து 3 நாட்களாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே தாறுமாறாக உயர்ந்து வந்தது. கடந்த ஜனவரி மாதம் தங்கம் விலை ரூ. 57,200 ஆக இருந்த நிலையில், அடுத்த 6 மாதங்களில் சுமார் 20 ஆயிரம் அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.840 அதிகரித்து இருந்தது. நேற்றும் அதே போல் விலை உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9,020-க்கும், ஒரு சவரன் ரூ.72,160-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.45-ம், சவரன் ரூ.360-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,065-க்கும், ஒரு சவரன் ரூ.72,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
03.07.2025 – ஒரு சவரன் ரூ.72,840
02.07.2025 – ஒரு சவரன் ரூ.72,520
01.07.2025 – ஒரு சவரன் ரூ. 72,160
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்துள்ளது. இதன் மூலம் இன்று சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 72,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.40 உயர்ந்து ரூ.9,105க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று சென்னையில் வெள்ளி விலையும் ரூ.1 அதிகரித்து கிராம் ரூபாய் 121க்கு விற்பனை செய்யப்படுகிறது.

