போதைப் பொருள் விவகாரம், திருப்புவனம் அஜித் குமார் கொலை, ரிதன்யாவின் தற்கொலை என அடுத்தடுத்து நடந்து வரும் சம்பவங்கள் நாட்டையே உலுக்கிக்கொண்டு இருக்கும் நிலையில் இது, குறித்து வெளிப்படையாக நடிகர் சசிகுமார் பேசியுள்ளார்.
ஜூலை 10 ஆம் தேதி இயக்குனர் சத்யா சிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள ப்ரீடம் படம் வெளியாகியுள்ள நிலையில், இது தொடர்பாக சசிக்குமார் பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். அப்போது நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் அஜித் குமார் இறப்பு மற்றும் ரிதன்யா தற்கொலை சம்பவங்களை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார் சசிகுமார்.
திருப்புவனம் அஜித் குமார் இறப்பு பற்றி சசிகுமார் கூறுகையில் “சக மனிதனை விசாரிக்கின்றோம் என்கின்ற எண்ணம் போலீசாருக்கு இருக்க வேண்டும். யாரையும் அடித்து துன்புறுத்தக் கூடாது. தவறு செய்திருந்தால் கூட அதை விசாரிக்க வேண்டிய வகையில் மட்டுமே விசாரிக்க வேண்டுமே தவிர சட்டத்திற்கு புறம்பாக காவலர்கள் விசாரணை நடத்துவதும் அடித்துக் கொள்வதும் இருக்கக் கூடாது” என வெளிப்படையாக பேசியுள்ளார்.
அது மட்டும் இல்லாமல், ரிதன்யாவின் தற்கொலையை பற்றியும் பேசிய சசிகுமார் “ஒரு மகளை பெற்று வளர்த்து ஏகப்பட்ட செலவு செய்து கட்டி கொடுக்கின்றோம். அந்த மகள் இல்லாமல் போய்விட்டால் பெத்தவங்களுக்கு எப்படி இருக்கும். வரதட்சணை கேட்டு ஒரு பெண்ணை திருமணம் செய்வது அசிங்கமா இல்லையா? என சசிகுமார் பல கேள்விகளை கேட்டுள்ளார். காசுக்காக ஒரு உசுரு போவது எல்லாம் ஒருபோதும் நியாயமான செயலே கிடையாது. மனிதர்கள் இந்த விஷயத்தில் கொஞ்சமாவது மனமாற்றம் அடைந்தால் மட்டுமே சமூகம் மாறும். ரிதன்யா போன்ற பல பெண்கள் இந்த வரதட்சனை கொடுமையால் தினமும் சித்திரவதை அனுபவித்துக் கொண்டு உள்ளார்கள். என சசிகுமார் பேசியுள்ளார். இவர் மனம் திறந்து பேசி இருக்கும் இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டும், பாராட்டப்பட்டும் வருகின்றது.

