Wednesday, February 4, 2026
Homeவணிகம்யெஸ் வங்கி பங்குகளை கையகப்படுத்துதலுக்கு அனுமதி!

யெஸ் வங்கி பங்குகளை கையகப்படுத்துதலுக்கு அனுமதி!

இந்தியாவின் பிரபல தனியார் வங்கியாக யெஸ் வங்கி உள்ளது. நிர்வாக குளறுபடிகள், அதிகப்படியான கடன் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு யெஸ் வங்கி திவால் ஆனதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன் பங்குகளை ஸ்டேட் வங்கி உள்பட பிற வங்கிகள் ஏற்று நிர்வகிக்க வேண்டும் என அறிவுறுத்தியதன் பெயரில் தொடர்ந்து இயங்கி வருகிறது.

 இந்த நிலையில் ஜப்பானின் புகழ்பெற்ற நிதி நிறுவனமாக சுமிடோமோ மிட்சுயி வங்கி யெஸ் வங்கியின் 24.99 சதவீத பங்குகளை வாங்குவதாக அறிவித்தது. இந்திய வங்கிகளிடம் இருந்த யெஸ் வங்கியின் பங்குகளுக்கு பல கோடி ரூபாய் விலை பேசியது. இந்த நிலையில் யெஸ் வாங்கி பங்குகளை ஜப்பான் நிறுவனம் கையகப்படுத்துதலுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments