Wednesday, February 4, 2026
Homeசெய்திகள்ஜெர்மனி, இங்கிலாந்தில் பார்சல் குண்டுவெடிப்பு.. லிதுவேனியாவில் 15 பேர் மீது பயங்கரவாத வழக்கு!

ஜெர்மனி, இங்கிலாந்தில் பார்சல் குண்டுவெடிப்பு.. லிதுவேனியாவில் 15 பேர் மீது பயங்கரவாத வழக்கு!

ஐரோப்பிய நாடான லிதுவேனியா தலைநகர் வில்னியசில் அழகு சாதனம் தயாரிப்பு நிலையம் அமைந்துள்ளது. அங்கு தயாரிக்கும் பொருட்கள் பார்சல் மூலம் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. அதன்படி ஜெர்மனி, போலந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கும் சில பார்சல் அனுப்பப்பட்டன. அப்போது ஜெர்மனியின் லிப்ஜிக் விமான நிலையத்தில் பார்சல் வெடித்து சிதறியது. அது போல் இங்கிலாந்து, போலந்து நாடுகளிலும் பார்சல் அலுவலகம் அருகே வெடித்து சிதறின.

 இது குறித்து லிதுவேனியா உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் ரஷ்யா ஆதரவுடன் இந்த சம்பவம் நடைபெற்றது தெரிய வந்துள்ளது. எனவே ரஷ்யா லிதுவேனியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 15 பேர் மீது பயங்கரவாத வழக்கு சுமத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments