Saturday, August 8, 2026
Homeசெய்திகள்சுதந்திர தின உரையில் இளைஞர் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க பிரதமர் மோடிக்கு CJP வலியுறுத்தல்!

சுதந்திர தின உரையில் இளைஞர் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க பிரதமர் மோடிக்கு CJP வலியுறுத்தல்!

வரும் ஆகஸ்ட் 15 சுதந்திரத் தின விழாவின் போது, செங்கோட்டையிலிருந்து ஆற்றும் உரையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் இளைஞர்களை மையப்படுத்திப் பேச வேண்டும் என்று வலியுறுத்தி, ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) அமைப்பின் நிறுவனரும் சமூக ஆர்வலருமான அபிஜீத் திப்கே இணையவழியில் சிறப்பு மனு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.

‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் இக்கோரிக்கைப் மனுவைப் பகிர்ந்துள்ள அவர், நாட்டின் எதிர்காலமாகத் திகழும் இளைஞர்கள் சந்தித்து வரும் கல்வி, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விண்ணைத் தொடப்போகும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு போன்ற முக்கியமான பிரச்சனைகள் குறித்து அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதைப் பிரதமர் தனது உரையில் நேரடியாக விளக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

சமீபத்தில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்த சிஜேபி அமைப்பு, நாட்டின்Gen Z மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் இக்கோரிக்கையை முன்வைத்து, இந்த மனுவில் பொதுமக்கள் அதிகளவில் கையெழுத்திட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments