Saturday, August 8, 2026
Homeசெய்திகள்மோசமான வானிலையால் அமர்நாத் யாத்திரை நிறுத்தம்; அஸ்ஸாம் வெள்ளம், இந்தியா–அமெரிக்க வரி விவகாரம், ‘டால்பின்’ புயல்...

மோசமான வானிலையால் அமர்நாத் யாத்திரை நிறுத்தம்; அஸ்ஸாம் வெள்ளம், இந்தியா–அமெரிக்க வரி விவகாரம், ‘டால்பின்’ புயல் முக்கிய செய்திகள்!

மோசமான வானிலை மற்றும் பக்தர்களின் வருகைக் குறைவு காரணமாக ஜம்முவிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வந்த புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அஸ்ஸாம் மாநிலத்தில் தொடரும் கடும் வெள்ளப்பெருக்கால் 1.55 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளப் பலி எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவிற்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளதால், இந்தியா-அமெரிக்க வர்த்தக உறவில் சவால்கள் எழுந்துள்ளன.

உள்நாட்டில், மகாராஷ்டிரா அரசு ‘ஸ்விக்கி’, ‘ஜொமேட்டோ’ போன்ற உணவு விநியோக நிறுவனங்களுக்கு மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்கவும், ஊழியர்களின் நலச்சாட்டங்களைக் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது.

சர்வதேச அளவில் ஜப்பானின் ஒகினாவாவை ‘டால்பின்’ புயல் தாக்கியுள்ள நிலையில், அதை எதிர்கொள்ள சீனா தனது முக்கிய துறைமுகங்களை மூடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments