Wednesday, February 4, 2026
Homeவணிகம்பங்குச்சந்தை எழுச்சி!

பங்குச்சந்தை எழுச்சி!

அமெரிக்கா வரி விதிப்பு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, உலக நாடுகள் இடையேயான போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பங்குச்சந்தை கடந்த மாதத்தில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன. இந்த மாத தொடக்கத்தில் வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை 5.5% ஆக தொடர ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து பங்குச்சந்தைகள் ஏற்றம் பெற்றன.

 நேற்று முன்தினம் திடீரென பங்குச் சந்தைகள் வீழ்ந்தன. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்த இஸ்ரேல்- ஹமால் போரை நிறுத்தத்திற்கான அமைதி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இது இந்திய பங்குச்சந்தையில் எதிரொளித்து பங்குச்சந்தை எழுச்சி பெற்றது.

 மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் “சென்செக்ஸ்” 398 புள்ளிகள் அதாவது 0.49 சதவீதம் உயர்ந்து, 82 ஆயிரத்து 172 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் “நிப்டி”  135 புள்ளிகள் அதாவது 0.59 சதவீதம் உயர்ந்து, 25 ஆயிரத்து 181 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments