Wednesday, March 4, 2026
HomeUncategorizedபிச்சைக்காரன் படத்தின் இரண்டாம்

பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம்

பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இசையமைப்பாளரும்,  நடிகருமான விஜய் ஆண்டனி இயக்கி நடிக்கிறார்.

‛‛ஒரு நீண்டகால கனவு இறுதியாக நனவாகிறது. இந்த புதிய அவதாரம் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. நீண்ட காலமாக எனது மனதில் இயக்குநர் ஆகும் ஆசை இருந்தது. 

ஒரு நடிகராக ஒவ்வொரு திரைப்படத்திலும், நான் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளேன், பல்வேறு திரைப்பட இயக்குநர்களிடமிருந்து பல நுட்பங்களையும், திறன்களையும் கற்றுக் கொண்டிருக்கிறேன். 

எந்தவொரு படைப்பாளிக்கும், தான் பணிபுரியும் துறை பற்றிய விழிப்புணர்வு இருப்பது நன்மை தரும் அம்சமாகும். இசையமைப்பாளராகவும் ஒரு நடிகராகவும் இத்துறையில் சிறந்ததொரு வெற்றியைப் பெற்றிருப்பது எனது அதிர்ஷ்டம்.

எனது திறமைகளை வளர்த்துக் கொள்ளும், இந்த திரைப்பயணத்தில், என்னை ஆதரித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுக்கு நான் இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். எனது பிறந்தநாளின் இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில், பிச்சைக்கரன் 2 திரைப்படத்தில், இயக்குநராக எனது புதிய பயணம் துவங்குவதை, உங்களுக்கு தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.”
-விஜய் ஆண்டனி

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments