தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்த்தப்பட்ட ஊரடங்கு வரும் 23-ம் தேதியுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களை திறப்பதற்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் தளர்வுகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தலைமைச் செயலாளர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
மேலும், முக்கியமாக இந்தக் கூட்டத்தில் பள்ளிகள் திறப்பு குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

