File Image
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் பொதுத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான ஊதிய விகிதத்தை இந்திய தேர்தல் ஆணையம் கணிசமாக உயர்த்தியுள்ளது.
இதன்படி, வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான (Presiding Officer) ஊதியம் ரூ.1,700-லிருந்து ரூ.3,000-ஆகவும், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான (Polling Officer) ஊதியம் ரூ.1,300-லிருந்து ரூ.2,600-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்களுக்கு ரூ.1,500, உதவியாளர்களுக்கு ரூ.1,400 மற்றும் நுண் பார்வையாளர்களுக்கு (Micro Observer) ரூ.2,000 எனப் புதிய ஊதிய விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் நடத்திய சோதனையில் மார்ச் 30-ஆம் தேதி வரை சுமார் ரூ.296.40 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

