Wednesday, March 18, 2026
HomeUncategorized4 மாத இடைவெளிக்கு பிறகு திரையரங்குகள் திறப்பு

4 மாத இடைவெளிக்கு பிறகு திரையரங்குகள் திறப்பு

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு வந்தன. அந்த வகையில், தமிழ்நாட்டிலும் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. 

இந்நிலையில், திமுக தலைமையிலான ஆட்சி அமைத்தது முதல் படிபடியாக தளர்வுகள் கொண்டு வரப்பட்டன. 

இந்நிலையில், நான்கு மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, தியேட்டர்களில் இருக்கைகள், டிக்கெட் கவுண்ட்டர் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட தூய்மை பணிகள் மும்முரமாக நடந்தன.
 
 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments