மதுரையிலிருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு 10:35 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். செங்கோட்டையிலிருந்து மாலை 03.45 மணிக்குப் புறப்பட்டு இரவு 07.10 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில்களில் 12 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் 2 சரக்கு மற்றும் காப்பாளர் பெட்டிகள் இணைக்கப்படும்.
இந்த தினசரி சிறப்பு ரயில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

