ரிசர்வ் வங்கி (RBI) பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் (Paytm Payments Bank) உரிமத்தை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல் 24, 2026 முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ள நிலையில், இனி அந்த வங்கி எந்தவிதமான வங்கிச் செயல்பாடுகளிலும் ஈடுபட முடியாது. வங்கியின் நிர்வாக நடைமுறைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு குறித்த விதிமுறைகளைத் தொடர்ந்து மீறிய காரணத்தால் இந்த இறுதி நடவடிக்கையை ஆர்பிஐ எடுத்துள்ளது.
முன்னதாக 2022 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கவும், வைப்புத்தொகை பெறவும் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து, தற்போது வங்கியையே மூடுவதற்கான விண்ணப்பத்தை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
இருப்பினும், வங்கியிடம் போதுமான நிதி இருப்பதால் வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகையைத் திருப்பி அளிப்பதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்றும், இது குறித்த கூடுதல் விவரங்களை வாடிக்கையாளர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

