Friday, May 8, 2026
Homeசெய்திகள்12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியீடு... வழக்கம் போல் அசத்திய மாணவிகள்!

12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியீடு… வழக்கம் போல் அசத்திய மாணவிகள்!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளைப் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் மொத்தம் 7.53 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், ஒட்டுமொத்தத் தேர்ச்சி விகிதம் 95.20 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்; மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 93.19 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 97 சதவீதமாகவும் உள்ளது.

தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து, மாணவர்கள் தங்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 13-ஆம் தேதி முதல் இணையதளம் வாயிலாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது அந்தந்தப் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்விக்கான அடுத்தகட்டப் பணிகளைத் திட்டமிட ஏதுவாக இந்த முடிவுகள் குறித்த விபரங்கள் பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன.

+2 முடிவுகளை http://tnresults.nic.in, http://dge.tn.gov.in இணையதளங்களின் மூலம் மாணவர்கள் அறியலாம்

78452 52525 என்ற எண்ணுக்கு ‘hi’ என அனுப்பி, வாட்ஸ் ஆப் செயலி மூலமும் +2 ரிசல்ட் அறியலாம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments