தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அரசியல் பிரிவு தனி அலுவலராக (Officer on Special Duty – Political) அவரின் ஆரூட & ஆத்மார்த்த ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைத் தமிழக அரசின் பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஷ் தாக்கர் இன்று (மே 12, 2026) வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சரின் அரசியல் ரீதியான செயல்பாடுகள், கட்சி மற்றும் அரசுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு போன்ற முக்கியப் பணிகளைக் கவனிக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, நிர்வாக இயந்திரத்தை வலுப்படுத்தும் வகையில் அடுத்தடுத்த நியமனங்கள் நடைபெற்று வரும் சூழலில், முதலமைச்சரின் இந்த நியமனம் தனிக் கவனத்தை பெறுகிறது

