Thursday, May 21, 2026
Homeசெய்திகள்‘வந்தே மாதரம்’ முதல்... ‘தமிழ்த் தாய் வாழ்த்து’ வரை – புதிய சர்ச்சைக்கு வழிவகுக்கும் பதவியேற்பு...

‘வந்தே மாதரம்’ முதல்… ‘தமிழ்த் தாய் வாழ்த்து’ வரை – புதிய சர்ச்சைக்கு வழிவகுக்கும் பதவியேற்பு விழா!

தமிழக லோக் பவனில் இன்று காலை புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா பிரம்மாண்டமாகத் தொடங்கிய சூழலில், விழாவின் தொடக்க நிகழ்வாக இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலின் முழுப் பதிப்பும் கம்பீரமாக இசைக்கப்பட்டு முறைப்படி விழா ஆரம்பமாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்ட பிறகு, மூன்றாவதாகத் தமிழகத்தின் மாநிலப் பாடலான ‘தமிழ்த் தாய் வாழ்த்து’ மீண்டும் முறைப்படி இசைக்கப்பட்டுப் புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வழக்கமாகத் தமிழக அரசு விழாக்களின் தொடக்கத்தில் ‘தமிழ்த் தாய் வாழ்த்து’ பாடப்பட்டு, நிறைவிலேயே ‘தேசிய கீதம்’ இசைக்கப்படுவதுதான் மரபாக இருந்து வரும் நிலையில், இந்த விழாவில் தேசியப் பாடலுக்கும் தேசிய கீதத்திற்கும் அடுத்தபடியாக மூன்றாவதாக மாநிலப் பாடல் இசைக்கப்பட்டுள்ளது; இதனால், எப்போதும் போல இன்று மதியத்திற்கு மேல் அரசியல் வட்டாரத்தில் ‘தமிழ்த் தாய் வாழ்த்துக்கே முதலிடம் தரப்பட வேண்டும்’ என்ற புதிய சர்ச்சை அதிரடியாக வெடிக்கத் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments