Saturday, May 23, 2026
Homeசெய்திகள்கிரிமினல்களுக்கு அதிகாரமா? தவெக அரசை கடுமையாக தாக்கிய நயினார்!

கிரிமினல்களுக்கு அதிகாரமா? தவெக அரசை கடுமையாக தாக்கிய நயினார்!

தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசை, அதன் மாற்று அரசியல் மற்றும் எம்.எல்.ஏ-க்களின் பின்னணியைக் கேள்வி எழுப்பி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மிகக் கடுமையாக வி விமர்சித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள காரசாரமான அறிக்கையில், கொடும் குற்றப் பின்னணி கொண்ட கிரிமினல்களைத் தேடித்தேடித் தேர்ந்தெடுத்து தேர்தலில் நிறுத்தி, தற்போது அவர்களை மக்கள் பிரதிநிதிகளாக உலா வரச் செய்திருப்பது தமிழகத்தில் பெரும் அச்ச அலையை ஏற்படுத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆயிரக்கணக்கானோர் விருப்பமனு கொடுத்திருந்தும், சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்துக் காவல்துறையைக் கண்டு ஓடி ஒளிந்த குற்றவாளிகளுக்கு தவெக தலைமை அதிகாரம் வழங்கியதன் பின்னணி பணமா அல்லது பயமா என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், இத்தகைய கிரிமினல்களால் எப்படி மக்கள் பணியாற்ற முடியும் என்றும் சாடியுள்ளார்.

மாற்றம் தருகிறோம் என்ற பெயரில் ஆட்சியமைத்த ஒரே மாதத்திற்குள்ளேயே மக்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தைப் பரிசளித்துள்ள தவெக அரசின் இந்தச் செயலைத் தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என்றும் நயினார் நாகேந்திரன் அந்த அறிக்கையில் அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments