Saturday, March 14, 2026
HomeUncategorizedதமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு - முதலமைச்சர் ஆலோசனை

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – முதலமைச்சர் ஆலோசனை

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துவரும் நிலையில், மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் சுகாதாரத் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். முதலமைச்சர் தலைமையில், நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாணவர்களின் நலன் கருதி சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தமிழத்தில் இதுவரை ஆசிரியர்களில் 90.11 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments