ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (63) மாரடைப்பால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே, ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க சசிகலா மருத்துவமனைக்கு நேரில் வருகை தந்து, கண்கலங்கிய ஓ.பன்னீர்செல்வம் கரம் பிடித்து சசிகலா ஆறுதல் தெரிவித்தார்.
மேலும், வைகோ, திருமா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஓ.பி.எஸ்-க்கு நேரில் ஆறுதல்

