Thursday, July 9, 2026
Homeசெய்திகள்சென்னை 2035-ஐ நோக்கி... 3-வது மாஸ்டர் பிளான் இறுதிக்கட்டத்தில்!

சென்னை 2035-ஐ நோக்கி… 3-வது மாஸ்டர் பிளான் இறுதிக்கட்டத்தில்!

சென்னை பெருநகரப் பகுதியின் (CMA) வளர்ச்சிக்கான 3-வது பெருந்திட்டத்தை (3rd Master Plan) இறுதி செய்யும் நோக்கில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (CMDA), சென்னை மாநகராட்சி (GCC), மெட்ரோ வாட்டர், காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அமைப்புகளுடன் கலந்தாலோசனையைத் தொடங்கியுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பருவநிலை மாற்றத்தைத் தாங்கவல்ல நிலையான திட்டமிடல், நீர்நிலைகளைப் பாதுகாத்தல், வலுவான சமூக உள்கட்டமைப்பு மற்றும் எதிர்காலக் குடிநீர், பாதாளச் சாக்கடை நெட்வொர்க்குகளின் அடிப்படையில் நகர்ப்புற வளர்ச்சியைத் திட்டமிடுதல் போன்ற பல்வேறு முக்கியப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, செயற்கைக்கோள் படங்கள், ட்ரோன் ஆய்வுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களின் உதவியுடன் கூடிய புவியியல் தகவல் அமைப்பு (GIS) சார்ந்த கண்காணிப்பு முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னையின் நெரிசலான மையப் பகுதிகளில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதா அல்லது செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்போரூர், ஓஎம்ஆர் மற்றும் ராணிப்பேட்டையின் சில பகுதிகளில் செங்குத்து வளர்ச்சி (Vertical Development) மற்றும் கூடுதல் தளப்பரப்புக் குறியீட்டை (FSI Increase) அனுமதிப்பதா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் இறுதி வரைவுத் திட்டம், இன்னும் மூன்று மாதங்களில் முதலமைச்சரால் முறைப்படி வெளியிடப்பட உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments