இயக்குனர் அட்லீ பாலிவுட் படம் ஒன்றை இயக்கி வருகிறார். ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புனேவில் நடைபெற்று வருகிறது.
இதில், நகைச்சுவை நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த யோகிபாபு தற்போது 2-வது முறையாக அவருடன் கூட்டணி அமைக்க உள்ளார்.

