Friday, March 6, 2026
HomeUncategorizedநாளை 'அண்ணாத்த' முதல் பார்வை

நாளை ‘அண்ணாத்த’ முதல் பார்வை

நடிகர் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படத்தின் முதல் பார்வை நாளை காலை 11 மணிக்கும், மோஷன் போஸ்டர் மாலை 6 மணிக்கும் வெளியீடு – படக்குழு அறிவிப்பு 

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். படத்தை இயக்குநர் சிவா இயக்குகிறார். வெற்றி ஒளிப்பதிவில், டி. இமானின்  இசையில் உருவாகி வருகிறது.

மேலும், இந்தப் படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.  இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், சென்னை, லக்னோ, கொல்கத்தா பகுதிகளில் நடந்து முடிந்தது. தீபாவளி பண்டிகையில் அண்ணாத்த படம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது முழு வீச்சில் நடந்து வருகின்றன. ரஜினிகாந்த் டப்பிங் பேசி முடித்துவிட்டார். 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments