Tuesday, September 22, 2026
Homeசெய்திகள்சட்டவிரோத ‘எக்ஸோடிக்’ செல்லப்பிராணி வர்த்தகம்: மனிதர்களுக்கு கொடிய நோய்கள் பரவும் அபாயம்!

சட்டவிரோத ‘எக்ஸோடிக்’ செல்லப்பிராணி வர்த்தகம்: மனிதர்களுக்கு கொடிய நோய்கள் பரவும் அபாயம்!

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு வளர்க்கப்படும் விசித்திர மற்றும் கவர்ச்சிகரமான ‘எக்ஸோடிக்’ (Exotic) செல்லப்பிராணிகளின் வர்த்தகம், மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே பல கொடிய நோய்த்தொற்றுகள் பரவும் பேராபத்தை ஏற்படுத்தி வருவதாக ‘ஹுமேன் வேர்ல்ட் ஃபார் அனிமல்ஸ்’ (Humane World for Animals) அமைப்பின் 2026 அறிக்கை மற்றும் ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

பறவைகள், ஊர்வன, பாலூட்டிகள் போன்ற வனவிலங்குகளைப் பிடித்து, மனஅழுத்தம் நிறைந்த சூழலில் நீண்டதூரம் கடத்தி வரும்போதும், பெட் கேஃபே (Pet Cafes), விலங்கு காட்சிப் பூங்காக்கள் மற்றும் வீடுகளில் வளர்க்கும்போதும் அவற்றிலுள்ள பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் மனிதர்களுக்கு எளிதாகப் பரவுகின்றன.

பறவைகளிடமிருந்து பரவும் சிட்டாகோசிஸ் (Psittacosis – கிளி நோய்), ஊர்வனவற்றிலிருந்து பரவும் சால்மோனெல்லோசிஸ் (Salmonellosis), குரங்கு உள்ளிட்ட பாலூட்டிகளிடம் இருந்து பரவும் காசநோய் (Tuberculosis) மற்றும் லைம் (Lyme) நோய் போன்றவை இதில் குறிப்பிடத்தக்கவை.

உலகம் முழுவதும் புதிதாக உருவெடுக்கும் தொற்றுநோய்களில் 75 சதவீதம் வனவிலங்குகள் சார்ந்த ‘சூனோடிக்’ (Zoonotic) நோய்களாக இருக்கும் சூழலில், முறையான நோய்க்கட்டுப்பாட்டு சோதனைகள் (Quarantine) மற்றும் கண்காணிப்பு இல்லாமல் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் இந்த எக்ஸோடிக் பிராணிகள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த மனிதன், வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழலை ஒருங்கிணைத்த ‘ஒரே ஆரோக்கியம்’ (One Health) அணுகுமுறையும் கடுமையான சட்டக் கட்டுப்பாடுகளும் மிக அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments