Wednesday, March 4, 2026
HomeUncategorizedமாலை 5 மணிக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு?

மாலை 5 மணிக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு?

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார்.  அப்போது, ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்து அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.  தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த ஆணையம் தீவிரமடைந்துள்ளது. 

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்திலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது.
 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments