மேலடுக்கில் நிலவும் காற்று வேறுபாடு மற்றும் காற்றின் நிலையற்ற தன்மை காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் வெப்பச்சலன இடிமழை அதிகரிக்கும்.
இன்று முதல் 4, 5 நாட்கள் தமிழகத்தின் மேற்கு உள் மாவட்டங்கள், வட உள் மாவட்டங்கள், தென் உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய உள் மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திண்டுக்கல், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுகோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் இடிமழைக்கும் ஆங்காங்கே கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
மேலும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் இடிமழைக்கும் ஆங்காங்கே கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
மேலும் மேற்கு மாவட்டங்களான
கோவை வடக்கு, திருப்பூர் வடக்கு நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் இடிமழைக்கும் ஆங்காங்கே கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
காற்று பகுதிகளில் ஒரிரு நாட்கள் ஆங்காங்கே, ஒரு சில பகுதிகளில் மழை இருக்கக்கூடும்.
மேலும் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, குமரி, நெல்லை, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களின் காற்று வீசும் பகுதிகள் தவிர ஆங்காங்கே இடிமழைக்கு வாய்ப்பு உள்ளது.

