தென்னிந்திய திரைப்பட நடிகையும், எனது நெருங்கிய குடும்ப நண்பருமான நடிகை மீனா அவர்களின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்த தகவலறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன்.
வித்யாசாகர் மறைவால் ஆற்றொணா வேதனையில் ஆழ்ந்திருக்கும் மீனா அவர்களும், நைனிகாவும், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் இத்துயரில் இருந்து விரைவில் மீள்வதற்கு இறைவன் அருள் புரியட்டும்.
அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் குடும்பத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு, அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ரா.சரத்குமார்
நிறுவனத் தலைவர்

