நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய ஜூலை 18ம் அரசு சார்பில் தமிழ்நாடு நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
கலை பண்பாட்டுத்துறை சார்பில் கோவை, மதுரை, தஞ்சாவூர், சேலம், ஈரோடு, கரூர்
உள்ளிட்ட 20 இடங்களில், இன்று (ஜூலை 18) தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அதாவது இயல், இசை, நாட்டியம் மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

