Thursday, February 5, 2026
HomeUncategorizedநடிகை ராதிகா பகிர்ந்த நடிகர் வடிவேலு காமெடி வீடியோ

நடிகை ராதிகா பகிர்ந்த நடிகர் வடிவேலு காமெடி வீடியோ

நடிகர் ரஜினிகாந்த், பிரபு இணைந்து நடித்த சந்திரமுகி திரைப்படத்தின் 2ஆம் பாகத்தை இயக்குநர் பி.வாசு நடிகர் ராகவா லாரன்ஸ் வைத்து எடுத்து வருகிறார். இந்தப் படத்தில் வடிவேல், ராதிகா உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே உள்ளது. இதன் படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று வருகிறது. 

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், சந்திரமுகி 2 படப்பிடிப்பு தளத்தில் நடிகர் வடிவேலு ‘சுறா’ படத்தின் கச்சேரி சீனை நடித்து காண்பித்துள்ளார். 

இந்த வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை ராதிகா, அந்த வீடியோவில் வடிவேலு செய்யும் காமெடி எந்த படத்தில் இடம்பெறும்? என குறிப்பிட்டுள்ளார். அதற்கு ஏராளமான ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments