Thursday, February 5, 2026
HomeUncategorizedமுதன்முறையாக அமெரிக்க மருத்துவக் கல்லூரியில் சித்த மருத்துவம்..!

முதன்முறையாக அமெரிக்க மருத்துவக் கல்லூரியில் சித்த மருத்துவம்..!

தமிழர் மருத்துவமான சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை அறிவியல் ஆய்வுப்பூர்வமாக  ஓர் அங்கிகாரம் பெற்ற பாரம்பரிய மருத்துவ முறையாகப் பரப்புவது அவசியமென உலகத் தமிழர்கள் குறிப்பாக அமெரிக்கத் தமிழர்கள் விரும்புகின்றனர்.

சித்த ஒருங்கிணைந்த மருத்துவத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த மருத்துவ மாமேதை செ. நெ. தெய்வ நாயகம் அவர்களால் தொடங்கப்பட்ட இந்திய நல வாழ்வு நல்லறம் (Health India Foundation) என்கிற தொண்டு அமைப்பு நீண்ட காலமாக ஒருங்கிணைந்த மருத்துவத்தில் ஆய்வு செய்து வருகிறது.

அந்நிறுவனத்தின் முன்னெடுப்பில் அமெரிக்காவின் அட்லாண்டா நகரில்  உள்ள புகழ் பெற்ற மோர்கவுஸ் மருத்துவ கல்லூரி (Morehouse School of Medicine, Atlanta, USA) தமிழர்களின்  மருத்துவமாகிய சித்தமருத்துவத்தை ஒரு பாடத்திட்டமாக அங்கீகரித்துள்ளது.

அமெரிக்க மருத்துவ வரலாற்றிலேயே முதன்முறையாக மருத்துவம் பயிலும் மாணவர்கள் சித்தமருத்துவம் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு இதனால் ஏற்பட்டுள்ளது.

இதில் இந்திய நலவாழ்வு நல்லறமும் கர்நாடகத்தில் உள்ள மணிபால் பல்கலைக்கழகமும் இணைந்து இந்த பாடத்திட்டத்தை உருவாக்கி அதற்குண்டான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. 

இதன் காரணமாக முதல் கட்டமாக மேல் குறிப்பிட்ட மருத்துவக் கல்லூரியின் மருத்துவ மாணவர் பேராசிரியரும் ஒருவரின் மேற்ப்பார்வையில் தமிழகம் வந்து இந்த பாடத்திட்டத்தை பயின்று வருகிறார்.

அதன் நிறைவு நிகழ்ச்சி இன்று மாலை 5 மணிக்கு தியாகராய நகரில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் நிகழ உள்ளது. (இந்திய நல வாழ்வு நல்லறம், 31, வெங்கட்நாராயணா ரோடு, திருப்பதி தேவஸ்தான அலுவலகம் எதிரே) 

கடல் கடந்து சென்றுள்ள சித்த மருத்துவத்தின் பெருமையினை தங்கள் ஊடகத்தின் வாயிலாக மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுகிறோம். 
 

மருத்துவர். ப. செல்வ சண்முகம். 
செயலர், இந்திய நலவாழ்வு நல்லறம், சென்னை
தொடர்புக்கு 
98948 28968
9345572908

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments