Saturday, March 14, 2026
HomeUncategorizedதிருவெம்பாவை 8

திருவெம்பாவை 8

கோழி சிலம்ப சிலம்புங் குருகெங்கும் ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப் பொருளை பாடினோம் கேட்டிலையோ? வாழியீதெனன உறக்கமோ? வாய் திறவாய் ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ? ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழைப்பங்காளனையே பாடேலோ ரெம்பாவாய்!

பொருள்:

நற்காலை பொழுது விடிந்து விட்டது, கோழிகள் கூவுகின்றன, எங்கும் சிறு பறவைகள் ஒலிக்கின்றன; நாதசுரம் ஒலிக்கின்றது, எங்கும் வெண் சங்குகள் முழங்குகின்றன. நாங்கள் அனைவரும் “தனக்குவமையில்லாத பேரொளியை, ஒப்பற்றபேரருளை,

மேலொன்றுமில்லாத மெய்ப் பொருளை, பரஞ்சோதியை பாடினோமே அது உனக்கு கேட்கவில்லையா? பெண்ணே வாழ்வாயாக! உன் உறக்கம் தான் எப்படிப்பட்டதோ! வாயைத் திறந்து ஒரு வார்த்தையாவது சொல். அருட்பெருங் கடலாகிய எம்பெருமானுக்கு நீ அன்பு செய்யும் முறை இதுதானா? ஊழி காலத்தில் அனைத்து ஜீவ ராசிகளும் அந்த எம்பெருமானது திருவடிகளிலே அடங்க தனி முதல்வனாய் விளங்கும் ஒப்பற்ற தலைவனை, உமையொரு பாகனை, ஏழைப் பங்காளனை பாட வேண்டாமா? எழுந்திரு கண்ணே!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments